ஈபிஎஸ் உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி: நேற்று நீக்கம், இன்று மீண்டும் கட்சியில் சேர்ப்பு..

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (09:32 IST)
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி நேற்று இரவு கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இன்று மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாஜக நிர்வாகி தினேஷ் என்பவர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்ததால் ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்த இடை நீக்கத்தை திரும்ப பெறுவதாக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சற்றுமுன் அறிவித்துள்ளார். ஒரே இரவில் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக நிர்வாகி மீண்டும் அந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு கட்சியில் சேர்த்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்