தேர்தலுக்குப் பிறகு அமைச்சர் தளவாய் சுந்தரம் பாஜகவில் சேருவார்… ஸ்டாலின் பிரச்சாரம்!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (12:33 IST)
கன்னியாகுமரியில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த போது அதிமுக அமைச்சர் தளவாய் சுந்தரம் தேர்தலுக்குப் பின் பாஜகவில் சேருவார் எனக் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் இரண்டாம் கட்ட பரப்புரை செய்து வருகிறார். அப்போது பேசிய அவர் ஆளும் கட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்தார். அதில் ‘இந்த கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் கூடியிருப்பது இந்த ஆட்சியைக் காட்டிலும் வெயில் ஒன்றும் கொடுமை இல்லை என்பதையே காட்டுகிறது.  கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் சசிகலாவுடன் இருந்து அவருக்கு துரோகம் செய்து விட்டு எடப்பாடியோடு சேர்ந்து தற்போது வேட்பாளராகி இருக்கிறார் . தேர்தல் முடிந்ததும் அவர் பாஜகவில் இணைந்துவிடுவார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்