ஒரு நாளைக்கு 1,50,000 முதல் 2,00,000 கொரோனா பாதிப்புகள் - வெதர்மேன் வார்னிங்!

செவ்வாய், 30 மார்ச் 2021 (10:03 IST)
கொரோனா இரண்டாவது அலை ஆபத்தானதாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 56,211 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,20,95,855 ஆக உயர்ந்துள்ளது.
 
ஒரே நாளில் 271 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,62,114 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,13,93,021 ஆக உயர்ந்துள்ளது. 5,40,720 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை ஆபத்தானதாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில், இந்தியாவில் விரைவில் ஒரு நாளைக்கு 1,50,000 முதல் 2,00,000 கொரோனா பாதிப்புகள் இருந்தால் ஆச்சரியப்பட வேண்டாம். 1918 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தொற்று நோயாக இருந்தாலும், பிரேசிலில் சமீபத்திய 2வது அலையாக இருந்தாலும் சரி. இரண்டாவது அலைகள் எப்போதும் சரீர விலகலை புறக்கணிப்பதால் மிகவும் ஆபத்தானவை என்று பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்