அமித் ஷாவை டிவிட் போட்டு பாராட்டிய கனிமொழி!

Webdunia
சனி, 2 நவம்பர் 2019 (16:25 IST)
தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். 
 
தமிழ்நாடு, கேரளா பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த வாரம் அரபிக் கடலில் ஆழ்கடல் பகுதியில் தங்கு கடல் மீன் பிடிப்பில் ஈட்டுப்பட்டிருந்த போது உருவான புயல் காரணமாக மீனவர்கள் பலர் காணாமல் போனதாக செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில், தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் “தூத்துக்குடி மாவட்டம் தருவாய்குளத்தை சேர்ந்த மீனவர்கள் அனைவரும் பத்திரமாக ஊர் திரும்பிவிட்டனர். இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மீட்புப்பணியில் ஈட்டுப்பட்ட கடற்படை, மாவட்ட ஆட்சியர் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்