மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் திடீர் ராஜினாமா.. என்ன காரணம்?

Siva
வியாழன், 2 மே 2024 (07:07 IST)
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் என்பவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தனது ராஜினாமா தொடர்பான கடிதத்தை அவர் ஆளுநருக்கு அனுப்பி இருப்பதாகவும் அந்த கடிதத்தில் உடல்நலம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் அவர்களின் பதவி காலம் முடிவதற்கு இன்னும் 11 மாதங்கள் இருக்கும் நிலையில் அதற்கு முன்பே அவர் ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஏற்கனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியால் இயங்கி வருகிறது என்றும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி சமீபத்தில் துணைவேந்தர் குமார் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் நிதி நெருக்கடி மற்றும் உடல்நிலை பாதிப்பு ஆகிய காரணங்களால் துணைவேந்தர் குமார் ராஜினாமா செய்திருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது. தனது ராஜினாமா குறித்து குமார் கூறிய போது ’உடல்நிலை பாதிப்பு காரணமாக ராஜினாமா செய்ய முடிவு செய்து ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளேன், வேறு எந்த காரணமும் இல்லை, உடல்நல பாதிப்பு காரணமாக பணியில் இருந்து விலகிக் கொள்ள முடிவு எடுத்தேன், ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்தார்

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்