டெல்லியில் சமூக நலத்துறை அமைச்சரும் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராஜ்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், சமீபத்தில் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்று நீதிமன்றம் கூறியது.
இவ்வழக்கில் ஏற்கனவே எம்பி.சஞ்சய் சிங்கும், கவிதாவும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சஞ்சய் சிங்கிற்கு மட்டும் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில், டெல்லி சமூக நலத்துறை அமைச்சரும், ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராஜ்குமார் ஆனந்த் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் கட்சியில் இருந்தும் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.