லோக் ஜனசக்தி கட்சி வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்று 5 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. இந்த நிலையில், சீட்டு ஒதுக்கீட்டில் அதிருப்தி அடைந்த பல தலைவர்கள் லோக் ஜனசக்தி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
சீட்டு ஒதுக்கீட்டில் கட்சியின் அடிமட்டத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள மூத்த தலைவர்கள், சீட்டு ஒதுக்கீட்டில் பணப் பரிவர்த்தனை நடந்ததாகவும் கூறி வருகின்றனர்,.