ரஜினியின் ஓய்வு; கூட்டணிக்கு கமல்ஹாசன்! – ஜனவரியில் முக்கிய அறிவிப்பு!

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (11:37 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கியமான முடிவுகள் ஜனவரியில் வெளியாகும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் தேர்தலுக்கு வேகமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் முன்னதாக ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து அறிவிக்கும் முன்னதாக பேசியிருந்த கமல்ஹாசன், தேர்தலில் ரஜினியின் ஆதரவை கோருவோம் என கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது உடல்நல குறைவு காரணமாக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளார். அவர் தீவிர ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது உடல்நலம் குறித்து பேசியுள்ள கமல்ஹாசன் “40 ஆண்டுகால நண்பருக்கு உடல்நலம்தான் முக்கியம். பிறகு அவர் அரசியல் தொடர்பான பணிகளை தொடர்வார் என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

அதேசமயம் மநீம தலைமையில் மூன்றாவது கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறியுள்ள கமல்ஹாசன், கூட்டணி அமைந்தாலும் தானே முதல்வர் வேட்பாளர் என்றும் இதுகுறித்து ஜனவரியில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை காரணமாக அவர் ஓய்வெடுக்க உள்ளதால் அவரது தார்மீக ஆதரவை பெற மநீம முயற்சிக்கலாம் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்