தமிழ்நாட்டில் பொங்கலையொட்டி பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நிலையில் முதன்முறையாக சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பொங்கலையொட்டி மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு எனும் மாடுபிடி திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2017ம் ஆண்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றது வரலாற்று நிகழ்வாக உள்ளது.
இந்நிலையில் பொங்கலுக்கு தென் தமிழ்நாட்டு மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை முதன்முறையாக சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை மெரினாவில் நடத்த வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.