ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை - கமல்ஹாசன் ரூ.20 லட்சம் நிதியுதவி

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2017 (14:47 IST)
ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நடிகர் கமல்ஹாசன் ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.


 

 
அமெரிக்காவில் புகழ் பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழில் இருக்கை அமைக்க பல வருடங்களாக தமிழ் அறிஞர்கள் முயன்று வருகிறார்கள். அதற்காக உலகம் முழுவதிலும் நிதி திரட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழக அரசு ரூ. 10 கோடியை நிதியாக வழங்கியது. நடிகர் விஷால் ரூ.10 லட்சம் அளித்தார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கனடாவில் நடத்திய இசை நிகழ்ச்சி மூலம் கிடைத்த பணத்தை நிதியாக வழங்கியிருந்தார்.
 
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன் தனது பங்கிற்கு ரூ.20 லட்சத்தை வழங்கினார். அவருடன் அவரின் நண்பர் பேராசிரியர் ஞானசம்பந்தமும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்