பொதுவாக, நாடு முழுவதும் குழந்தைகளை 5 வயதில் பள்ளியில் சேர்க்கும் நடைமுறை இருக்கும்போது, கேரளாவில் தற்போது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் வயதை ஆறு என உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐந்து வயதில் முதலாம் வகுப்பு சேர்க்க வேண்டும் என்ற அரசின் விதிமுறைகள் இருக்கும் நிலையில், சிலர் இரண்டு வயதிலேயே பேபி கிளாஸ், மூன்று வயதில் எல்கேஜி என குழந்தைகளை பள்ளியில் சேர்த்து வருகின்றனர். இவ்வளவு சிறிய வயதில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, அவர்களின் மனநலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், 5 வயதை கூட இல்லாமல், 6 வயதாக குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் வயதை நிர்ணயித்து, கேரளா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குழந்தைகள் 6 வயதில் தான் முறையான கல்விக்கு தயாராகின்றனர் என்று ஆய்வுகள் கூறுவதாகவும், அதனால் தான் 5 வயதிலிருந்து 6 வயதாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்துள்ளார்.