ஏழரைக் கோடி போதும் – திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கேலி கமல் !

Webdunia
வியாழன், 3 அக்டோபர் 2019 (08:20 IST)
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபைக் கூட்டங்களில் கலந்துகொண்ட கமல் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை கிண்டல் செய்யும் விதமாகப் பேசியுள்ளார்.

கமலின் மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாக கிராமசபைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்றும் தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு லைட் அவுஸ் குப்பத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர் ‘இந்த இடத்தை சுற்றியுள்ள கிராமங்களில் போதிய மருத்துவ வசதி இல்லை. இது தொடர்பாக அமைச்சர்களிடம் பேசிய போது கட்டிடங்கள் கட்டித் தருகிறோம் என சொல்லியுள்ளனர். அப்படி செய்தால் எங்களால் மருத்துவர்களைப் பணியமர்த்த முடியும். எங்கள் கட்சியிலேயே 1000 மருத்துவர்கள் உள்ளனர். பணப்பட்டுவாடா நடப்பதால்தான் இடைத் தேர்தலைப் புறக்கணித்தோம். எங்களுக்கு 25 கோடி வேண்டாம். ஏழரைக் கோடி போதும். அது ஏழரைக் கோடி மக்களாக இருக்க வேண்டும்.; எனக் கூறினார்.

திமுக கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேர்தல் செலவுக்காக 25 கோடி கொடுத்ததைதான் கமல் கிண்டல் செய்யும் விதமாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்