தமிழர் மனதில் இடம்பிடிக்க இதனை செய்யுங்கள்: மோடிக்கு கமல் அறிவுரை

புதன், 2 அக்டோபர் 2019 (17:25 IST)
உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அவ்வப்போது மத்திய அரசையும் மாநில அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தமிழர்கள் மனதில் பிரதமர் மோடி நீங்கா இடம்பிடிக்க ஒரு ஐடியாவை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:
 
 
தமிழகமும், தமிழர்களும் சுபஸ்ரீயின் இழப்பில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், உங்கள் வருகைக்கு பேனர்கள் வைக்க தமிழக அரசு நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது. பிரதமரான நீங்கள் ஒரு முன்னோடியாக திகழ, முதலில் இந்த பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; இது தமிழர்களின் உணர்வை நீங்கள் பிரதிபலிப்பதாக அமைவது மட்டுமின்றி தமிழர்கள் மனதில் இடம்பிடிக்க உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு என கமல் தனது டுவீட்டில் தெரிவித்துள்ளார்.
 
 
சுபஸ்ரீயின் மரணத்தை அவரது குடும்பமும் தமிழக மக்களும் இன்னும் மறக்க முடியாமல் உள்ளனர். இவருடைய மரணம் பேனர் கலாச்சாரத்திற்கே முற்றுப்புள்ளி வைக்கும் என கருதப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் இனி பேனர் வைக்க வேண்டாம் என தங்களுடைய தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் தமிழக அரசே பேனர் வைக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பது ஒரு மோசமான முன்னுதாரணம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்