எனக்கு இன்னொரு முகம் இருக்கு: எச்சரிக்கை செய்த கமல்ஹாசன்!

Webdunia
திங்கள், 27 மே 2019 (20:04 IST)
என்னை யாரும் ஏமாற்ற முடியாது, எனக்கு இன்னொரு முகம் இருக்கு, அந்த முகம் தப்பு செய்தவர்களை தண்டிக்க தயங்காது என்று மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
 
மக்களவை தேர்தல் முடிவடைந்ததை அடுத்து நேற்று கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுக்கு விருந்து அளித்தார். விருந்துக்கு பின்னர் நிர்வாகிகளிடம் பேசிய கமல்ஹாசன், 'இந்த தேர்தலில் நமது கட்சி நல்ல வாக்கு சதவிகிதத்தை பெற்றுள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் அதிக வாக்குகள் கிடைத்திருந்தாலும், டெல்டா மாவட்டம், வடமாவட்டங்களில் நாம் குறைவான வாக்குகளை பெற்றுள்ளோம். 
 
தேர்தல் முடிந்துவிட்டது என்று எண்ணம் இல்லாமல் ஒவ்வொரு நாளும் மக்கள் பணியாற்றுங்கள். இந்த தேர்தலின்போது யார் யார் அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை செய்தார்கள், யார் வேலை செய்யாமல் ஏமாற்றினார்கள் என்பது எனக்கு தெரியும். அவர்களின் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் இனியும் பொறுமையுடன் இருக்க மாட்டேன்.  எனக்கு இன்னொரு முகம் இருக்கின்றது. அந்த முகம் தப்பு செய்தவர்களை பாரபட்சமின்றி தண்டிக்கும் முகம். தவறு செய்தவர்களை கட்சியில் இருந்து நீக்கவும் தயங்க மாட்டேன்' என்று கமல்ஹாசன் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்