மக்களிடம் வன்முறையை தூண்டும் கமல்: சென்னை கமிஷனரிடம் புகார்

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2017 (14:59 IST)
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மக்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் நடிகர் கமலஹாசன் நடந்து கொள்வதாக இந்திய தேசிய லீக் கட்சி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.


 

 
அதிமுக இரு அணிகளாக பிரிந்த பின் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் சற்று காட்டமாகவே கருத்து தெரிவித்து வந்தார். பொது மக்கள் சசிகலா தரப்பு மீது தங்களது கோபங்களை வெளிகாட்டும் விதத்தை கருத்தாக பதவிட்டு வந்தார். 
 
இதனால் கமல்ஹாசன் மீது தற்போது இந்திய தேசிய லீக் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மக்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் நடிகர் கமல்ஹாசன் நடந்து கொள்வதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
 
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்கும் வரை அனைவரும் சசிகலாவுக்கு எதிராக பல கருத்துகளை தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் தாண்டி கமல்ஹாசன் தெரிவித்த கருத்துகள் எந்த விதத்தில் வன்முறை தூண்டுதலுக்கு காரணமாக அமையாது.
 
பொதுமக்கள் இவர் கருத்து தெரிவிக்கும் முன்பே தங்களது கண்டனங்களை சமூக வலைதளங்களில் பதவிட்டு வந்தனர்.
அடுத்த கட்டுரையில்