“ஹிந்து தீவிரவாதி “ என கூறிய கமல் மீது தொடரப்பட்ட வழக்கு: நீதிமன்றம் ஒத்திவைப்பு

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (13:19 IST)
கோட்ஷேவை ஹிந்து தீவிரவாதி என விமர்சித்த கமல்ஹாசன் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், பாட்டியாலா நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலின் போது, மக்கள் நீதி மய்ய வேட்பாளரை ஆதரித்து பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோட்ஷே ஒரு ஹிந்து தீவிரவாதி என கூறினார். இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது.

இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இந்து சேனா கட்சியின் தலைவர் விஷ்ணு குப்தா வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று வந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையை பாட்டியாலா நீதிமன்றம் அக்டோபர் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்