பாகிஸ்தானிற்கு அமெரிக்கா போர் விமானம் விற்க முடிவு: இந்தியா அதிருப்தி

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (12:52 IST)
அதிநவீன போர் விமானமான எப்.16 ரக விமானத்தை பாகிஸ்தானிற்கு அளிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில்,  இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இடையே சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவ உறவை பலப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை நடந்ததாக தெரியவந்தது.

இந்நிலையில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி, அமெரிக்கா, அதி நவீன போர் விமானமான, 125 மில்லியன் மதிப்பிலான, எப்.16 ரக விமானத்தை பாகிஸ்தானிற்கு அளிக்க முடிவு செய்தது. மேலும் பாகிஸ்தானிற்கு தொழில்நுட்ப சேவைகளிலும் ஆதரவு தரவுள்ளதாகவும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக விவகாரங்களுக்கான செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசியதில்,

பாகிஸ்தானிற்கு அதி நவீன போர் விமானமான எப்.16 ரக விமானத்தை அமெரிக்கா அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ள விவகாரத்தை, டில்லியில் உள்ள அமெரிக்க தூதரிடம் கொண்டு சென்றுள்ளோம். மேலும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதர் மூலம் அமெரிக்க அரசிடமும் நமது அதிருப்தியை தெரிவித்துள்ளோம் என கூறியுள்ளார்.

மேலும் காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பகை ஏற்படுவதை விரும்பவில்லை என கூறும் டிரம்ப், தற்போது பாகிஸ்தான் ராணுவத்திற்கு உதவி செய்வதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது பெரும் முரணாக தெரிகிறது எனவும் அந்த பேட்டியில், ரவீஷ் குமார் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்