கட்டையால் சிறுத்தையை அடித்து விரட்டிய கோவை பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது

Webdunia
புதன், 15 ஆகஸ்ட் 2018 (10:17 IST)
சிறுத்தையிடம் இருந்து தனது மகளை காப்பாற்ற அதனை கட்டையால் அடித்து துரத்திய கோவையை சேர்ந்த முத்துமாரிக்கு சுதந்திர தின விழாவில், முதலமைச்சர் கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவப்படுத்தினார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆனதை அடுத்து இன்று டெல்லி செங்கோட்டையில் பாரத பிரதமர் நரேந்திரமோடி தேசிய கொடியை சற்றுமுன் ஏற்றி வைத்து மக்களிடம் உரையாற்றினார்.
 
அதனைத் தொடர்ந்து சென்னை கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து, தமிழக அரசின் நல்ஆளுமை விருதுகளை வழங்கினார்.
 
அதில் கல்பனா சாவ்லா விருதை கோவை கோவை மாவட்டம் பெரியகல்லார் கிராமத்தை சேர்ந்த முத்துமாரி கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவித்தார். 
கடந்த மே மாதம் தனது மகளை இழுத்துச்சென்ற சிறுத்தையை தனி ஆளாக கட்டையை கொண்டு அடித்து விரட்டினார் முத்துமாரி. அவரின் வீரத்தை கவுரவிக்க இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்