கருணாநிதி நினைவிடத்தின் வரைபடம் இதுதான்: வைரலாகும் புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (19:10 IST)
கருணாநிதி நினைவிடத்தின் வரைபடம் இதுதான்: வைரலாகும் புகைப்படம்!
முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் இன்று காலை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
அண்ணா சமாதி அருகே உள்ள இடத்தில் 39 கோடி ரூபாய் செலவில் கருணாநிதி நினைவிடம் அமைக்கப்படும் என்றும் அதில் கருணாநிதியின் சாதனைகள் மற்றும் சமூக சேவைகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் எழுத்துக்கள் பொறிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு ரூபாய் 39 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும் என இன்று காலை சட்டமன்றத்தில் முதல்வர் தெரிவித்த நிலையில் அதன் வரைபடம் தற்போது வெளியாகியுள்ளது
 
இந்த வரைபடத்தில் புகைப்படம் மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரைபடத்தில் உதயசூரியன் சின்னமும் கலைஞர் பயன்படுத்திய பேனாவும் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்