தேசிய சொத்துகளை குத்தகைக்கு விடுவதா? ராகுல் காந்தி கடும் கண்டனம்

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (19:09 IST)
தேசிய சொத்துக்களை குத்தகைக்கு விடும் பாஜக அரசின் திட்டத்திற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்
 
தேசிய சொத்துக்களை பணமாக்கும் திட்டம் என்ற பெயரில் விற்பனை செய்வது மோசமான செயல் என்றும் 42 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள மின்வழித்தடங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது பிரதமர் மோடியின் மோசமான திட்டங்களில் ஒன்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
அதேபோல் நாட்டில் உள்ள 25 விமான நிலையங்கள், உணவு தானியக் கிடங்குகள் தனியாருக்கு விற்க பிரதமர் முடிவு செய்துவிட்டார் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமான பல ஆயிரம் செல்போன் கோபுரங்களை தனியாருக்கு கொடுக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு என்பதையே ஒழிக்க பார்க்கிறது மத்திய பாரதிய ஜனதா அரசு என்றும் அரசின் இந்த செயல்பாடுகளை அம்பலப்படுத்துவது இளைஞர்களின் கடமையாக இருக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்