எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மலிவான அரசியலில் ஈடுபடுகிறார் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதற்கு பதிலடியாக கருத்து தெரிவித்துள்ளார் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1540 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் “எதிர்கட்சி தலைவர் இக்கட்டான சூழலிலும் மலிவான அரசியல் செய்கிறார்” என கூறினார். இது திமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
அமைச்சர் விஜயபாஸ்கரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு பேரிடர் காலத்திலும் அதிமுக அரசு மக்கள் நலனில் ஆர்வமின்றி செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல், மருத்து பரிசோதனை கருவிகள் கையிறுப்பு குறித்து மு.க.ஸ்டாலினின் கேள்விக்கு சுகாதாரதுறை அமைச்சர் பதில் அளிக்காததை குறிப்பிட்டு பேசிய அவர் “யார் மலிவான அரசியல் செய்கிறார்கள்?:” என கேள்வி எழுப்பியுள்ளார்.