பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்கு தோல்வி: வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

Mahendran
திங்கள், 25 மார்ச் 2024 (16:48 IST)
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த பல வருடமாக ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்புக்கு தான் வெற்றி கிடைத்து வந்த நிலையில் தற்போது இடதுசாரி ஆதரவு அமைப்புக்கு வெற்றி கிடைத்துள்ளதை அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மாணவர் சங்கத் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ள இடது முன்னணியாதற்கு எனது வாழ்த்துக்கள் என்றும் ஏவிபி அமைப்பினரின் வன்முறை வழிமுறைகளும் கடைசி நிமிடத்தில் இடது வேட்பாளர் சுவாதிசிங்கின் வேட்ப மனுவை நிராகரித்ததும் அவர்களின் தோல்வி பயத்தை அம்பலப்படுத்தி விட்டது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
வலதுசாரி பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்கு கட்டியம் போடுவதாக இந்த வெற்றி அமைந்துள்ளது என்றும் இதே போல் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்திய மக்கள் ஒன்று சேர்ந்து பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
தமிழக முதல்வரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்