ஜெயலலிதாவின் முதல் கையெழுத்து: பயிர்க் கடன் தள்ளுபடி, படிப்படியாக மதுவிலக்கு

Webdunia
திங்கள், 23 மே 2016 (13:17 IST)
தமிழக முதல்வராக இன்று மீண்டும் பதவியேற்றுக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா இன்று ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். தனது முதல் கையெழுத்தாக பயிர் கடன் தளுபடி செய்தார்.


 
 
தமிழக முதல்வராக இன்று ஆறாவது முறையாக பதவியேற்றார் முதல்வர் ஜெயலலிதா. அவருடன் 28 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டார்கள். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் ஆளுநர் கே.ரோசைய்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
 
மீண்டும் முதல்வராக பதவியேற்றதும் ஜெயலலிதா தனது வழக்கமான அலுவல்களை பார்க்க தலைமை செயலகம் சென்றார். தலைமை செயலகம் சென்ற அவர் ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.
 
தனது முதல் கையெழுத்ததாக கூட்டுறவு வங்கிகளிடம் கடந்த மார்ச் 31 வரை வாங்கிய கடன் தள்ளுபடி செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கூறியதை நிறைவேற்ற கடைகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைக்கு கையெழுத்திட்டார் ஜெயலலிதா.
 
தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம், அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம், நெசவாளர்களுக்கு 200 யூனிட் வரை இலவசம், விசைத்தறிக்கு 750 யூனிட் வரை இலவச மின்சாரம் என ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார் ஜெயலலிதா.
அடுத்த கட்டுரையில்