இந்த குண்டு வீச்சு சம்பவத்தில் ஒருவருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற இருவரிடமும் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. மேலும் இந்த குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தனி நபர்களா? அல்லது அமைப்பைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து விசாரணை முடிவில் தான் தெரியவரும் என்று கூறப்பட்டு வருகிறது.