ஜெயலலிதா டிஸ்சார்ஜ் தேதி கசிந்தது: டிசம்பர் மாதம்.......?

Webdunia
புதன், 30 நவம்பர் 2016 (09:18 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். 2 மாதங்கள் கடந்த நிலையில் மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


 
 
இந்நிலையில் ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டார் அவர் எப்போது வீடு திரும்புவார் என்பதை அவரே முடிவு செய்வார் என அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி அடிக்கடி பேட்டியளித்து வருகிறார்.
 
இதனையடுத்து ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் அவரது டிஸ்சார்ஜ் குறித்து தீவிர ஆலோசனையில் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. பல ஜோதிடர்களின் ஆலோசனையை கேட்டு வருகிறார் சசிகலா. வேளச்சேரியில் உள்ள கேரள ஜோதிடர் ஒருவரை வரவழைத்த சசிகலா ஆலோசனை கேட்டுள்ளார். ஆனால் அவர் சொன்ன ஐடியாக்களை கேட்ட சசிகலா அதில் திருப்தியடையவில்லை.
 
இதனையடுத்து மற்றொரு முக்கிய ஜோதிடரை வரவழைத்தார் சசிகலா. அவர் ஜெயலலிதாவின் ஜாதகத்தை முழுமையாக படித்து பார்த்துவிட்டு சில தகவல்களை கூறியிருக்கிறார். அதில் ஜெயலலிதாவின் ஜாதகப்படி டிசம்பர் 5 வரை அவருக்கு நேரம் சரியில்லையாம். அதன் பின்னர் டிசம்பர் 5 முதல் 12 வரை ஏதாவது நல்ல நாளில் அவரை டிஸ்சார்ஜ் செய்யலாம் என அவர் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அது வளர்பிறையாக இருப்பதாக ஜோதிடர் கூறியுள்ளார்.
 
டிசம்பர் 5-க்கு அப்புறம் அடுத்த ஒரு வருடம் ஜெயலலிதாவின் ஆரோக்கியத்துக்கு எந்த சிக்கலும் இருக்காதாம். ஏற்கனவே வேளச்சேரியில் இருந்து வந்த ஜோதிடரும் இதே தேதியைதான் குறித்து கொடுத்தாராம் என பேசப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்