6 மாத காலத்திற்கு காட்டு யானைகள் கணக்கெடுப்பு

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2016 (21:13 IST)
தேசிய அளவிலான காட்டு யானைகள் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக பெரியாறு புலிகள் சரணாலயம் மற்றும் பரம்பிக்குளம் சரணாலயம் இணைந்து கேரள மாநிலத்தில் யானைகளின் கணக்கெடுப்பைத் துவக்க உள்ளது. இந்த கணக்கெடுப்பு நாளை தொடங்கி அறு மாதத்தில் முடிவடையும்.


 


தேசிய அளவிலான காட்டு யானைகள் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக பெரியாறு புலிகள் சரணாலயம் மற்றும் பரம்பிக்குளம் சரணாலயம் இணைந்து கேரள மாநிலத்தில் யானைகளின் கணக்கெடுப்பைத் துவக்க உள்ளது.
 
வைல்ட்லைஃப் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் மூலம் இந்த கணக்கெடுப்பு நவம்பர் 30 (நாளை) தொடங்கி ஆறு மாதங்களில் முடிவடையும். இந்த கணக்கெடுப்பானது பெரியாறு, செந்தூரணி, மூனாறு, பரம்பிக்குளம், அமைதி பள்ளத்தாக்கு மற்றும் வயநாடு காடுகளில் நடத்தப்பட உள்ளது. டீகே மெதட் எனப்படும் சிதைவு முறையில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. 
 
யானை சாணத்தின் அடர்த்தி, இறந்த, காயமுற்ற யானைகளின் சிதைந்தப் பகுதிகள், யானைக் கழிவுகளின் விகிதம் போன்ற பலக் காரணிகளை உள்ளடக்கிய சூத்திரத்தைக் கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மேலும் எந்தந்தப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டங்கள் அதிகமாக உள்ளன என்பதையும் கணிக்க உள்ளார்கள்.
 
MURUGARAJ
murugaraj1606@gmail.com
அடுத்த கட்டுரையில்