சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய ரெய்டு.. ரூ.30 லட்சத்துக்கு மேல் நிலம் வாங்கியவர்களுக்கு சிக்கல்?

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (10:40 IST)
தமிழகத்தில் உள்ள முக்கிய சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் ரெய்டு செய்து வருவதாகவும் சில அலுவலகங்களில் விடிய விடிய 17 முதல் 20 மணி நேரம் வரை ரெய்டு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
திருச்சி மாவட்டம் உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 20 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடந்ததாகவும் கணினி மற்றும் பதிவேடுகளில் உள்ள முக்கிய தகவல்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. 
 
அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 17 மணி நேரத்துக்கு மேலாக நடந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத பல சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
குறிப்பாக 20 லட்சம் முதல் 30 லட்சத்திற்கு மேல் சொத்து வாங்கியவர்களுக்கு இந்த வருமான வரி சோதனை காரணமாக சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்