வி.வி மினரல் குழுமத்தின் 24 வங்கி லாக்கர்கள் முடக்கம்..

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (11:33 IST)
வி.வி. மினரல் குழுமத்திற்கு தொடர்புடைய 24 வங்கி லாக்கர்கள் மற்றும் 30 வங்கி கணக்குகளை வருமானவரித்துரை முடக்கம் செய்துள்ளனர்.

 
விவி மினரல்ஸ் நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற புகார் வருமான வரி அலுவலகத்திற்கு வந்ததை அடுத்து கடந்த 25ம் தேதி காலை வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வைகுண்டராஜன் வீடு மற்றும் அலுவலகங்கள், அவரது மகனின் வீடு மற்றும் அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக செய்தனர். சென்னையில் நுங்கம்பாக்கம், திருவான்மியூர் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, திசையன்விளை போன்ற இடங்களில் அதிகாரிகள் தனித்தனி குழுவாக சென்று சோதனை நடத்தி வந்தனர்.
 
5 நாளாக இன்றும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்த நிறுவனத்தின் தொடர்புடைய வங்கி லாக்கர்கள் மற்றும் 30 வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் இன்று முடக்கம் செய்துள்ளனர்.
 
மேலும், விவி மினரல் குழுமத்தின் இயக்குனர் வைகுண்டராஜனை சொந்த ஊருக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த வருமானவரித் துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் வைகுண்டராஜன் தூத்துக்குடிக்கு  அழைத்துச்செல்லப்பட்டார் 
 
தூத்துக்குடியிலிருந்து அவரது நிறுவனத்தின் தலைமையிடமான திசையன்விளையில் வைத்து விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் குறித்து வைகுண்டராஜனிடம் வாக்குமூலம் பதிவு செய்யவும் அதிகாரிகள்  முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்