ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

Prasanth Karthick

வெள்ளி, 17 மே 2024 (12:33 IST)
தமிழ்நாட்டில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் நீலகிரி வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.



தமிழ்நாட்டில் கோடைக்காலம் நடந்து வந்தாலும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. மதுரை, பொள்ளாச்சி மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த நாட்களில் கனமழை பெய்து தீர்த்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் அதிகனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திற்கும் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏராளமான மக்கள் ஊட்டி, நீலகிரி என மலைவாசஸ்தலங்களுக்கு செல்வது அதிகரித்துள்ளது. தற்போது மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நிலச்சரிவு, மரங்கள் முறிந்து விழுவது போன்றவை நடக்கலாம் என்பதால் மலைப்பகுதிகளில் பயணிப்பதில் ஆபத்து உள்ளது.

அதனால் மே 18 முதல் 20 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நாட்களில் நீலகிரி வருவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அம்மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் நீலகிரியில் மழைக்கால பேரிடர் மீட்பு பணிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்