தேனி மாவட்டம், ஊஞ்சாம் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மணி நகர் பகுதி வசிக்கும் மக்கள் ஜல் ஜீவன் மிசன் சேமிப்பு, திட்ட நிதியிலிருந்து 2020- 2021 ஆம் ஆண்டு 60 ஆயிரம் லிட்டர் நீர்த்தேக்க தொட்டி 16 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை எனவும்
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சாலை, குடிநீர், சாக்கடை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாகவும்
அன்னஞ்சி விளக்கு முதல் மணி நகர் பகுதிக்கு செல்லக்கூடிய சாலைகள் சுமார் மூன்று கிலோ மீட்டர் சாலை சேதமடைந்து குண்டும், குழுயுமாக காணப்படுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டவர்களிடம் கடந்த மூன்று ஆண்டுகளாக புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்