2026 தேர்தலில் விஜய் போட்டியிடும் தொகுதி இதுதானா? இப்போதே போஸ்டர் அடிக்க தொடங்கிய தொண்டர்கள்!

Prasanth Karthick
ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (10:19 IST)

விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், 2026 தேர்தலில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என தொண்டர்கள் இப்போதே போஸ்டர் அடித்துள்ளனர்.

 

 

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அதன் முதல் மாநாடு வரும் 27ம் தேதி அன்று விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்காக விக்கிரவாண்டியில் மாநாடு ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்து வருகின்றன. இதில் விஜய் தனது கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகளை அறிவிக்க உள்ளார்.

 

இந்நிலையில் விஜய்யின் முதல் மாநாட்டை முன்னிட்டு தவெக தொண்டர்கள் பல பகுதிகளில் போஸ்டர், பேனர் வைத்து வருகின்றனர். அவ்வாறாக மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது வைரலாகியுள்ளது.

 


அதில் “2026ன் மதுரை வடக்கு தொகுதியின் வெற்றி வேட்பாளர் கழக தலைவர் விஜய்” என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் கட்சி தொடங்கியிருந்தாலும் நடிகர் விஜய் தான் நேரடியாக தேர்தலில் போட்டியிடுவது குறித்து எதுவும் பேசவில்லை.

 

தற்போது கட்சி மாநாட்டில் அதுகுறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்படி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்