இந்த படத்தில் முதலில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பின்னர் சுந்தர் சி யே கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் மே 3 ஆம் தேதி ரிலீஸான நிலையில், கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும் படத்தின் வசூல் விமர்சனங்களைத் தாண்டி பெரியளவில் உள்ளது. முதல் வாரத்தில் இந்த படம் வசூலில் 50 கோடி ரூபாயைத் தாண்டியது. இந்நிலையில் இப்போது படம் மூன்றாவது வாரத்தில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி 2024 ஆம் ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் தமிழ் சினிமாவாக மாறியுள்ளது.
இதனால் இதன் ஐந்தாம் பாகத்தை உருவாக்க சுந்தர் சி தற்போது தயாராகி விட்டார். இதற்காக சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக அரண்மனை செட் அமைக்கப்பட்டு வருகிறதாம். நவம்பர் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கி ஏப்ரல் நான்காவது வாரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.