’தனி மயானத்தை ’அரசே ஊக்குவிப்பதா..உயர் நீதிமன்றம் கேள்வி

Webdunia
திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (14:08 IST)
வேலூர் மாவட்டத்தில்  வாணியம்பாடி அருகே உள்ள பகுதியில் சுடுகாட்டுக்குச் செல்ல பாதைகள் இல்லாத நிலையில், சடலத்தை சற்று வித்தியாச முறையில் சுடுகாட்டுக்கு கொண்டு செல்கின்றனர். இதனால் தனி மயானத்தை அரசே அமைத்துக் கொடுத்து தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் , இது சாதிப்பிரிவினையை அரசே ஊக்குவிப்பதாக உள்ளதாக கேள்வி எழுப்பியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே உள்ளது நாராயணபுரம் என்ற கிராமம். இங்கு பட்டியலினத்தவர் அதிகம் பேர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கெனவே தனியாக சுடுகாடு  உள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை பாலாற்றங்கரையில் உள்ள சுடுகாட்டிற்கு இவர்கள் தூக்கிச் செல்கின்றனர்.
 
இந்நிலையில் சில் ஆண்டுகளுக்கு முன்னர் பாலாற்றங்கரையில் ஒரு பாலம் கட்டப்பட்டது. இந்தல் பாலாற்றின் இருமருங்கிலும் ஆற்றிற்குச் செல்லும் வழிகளை வேறு பிரிவு மக்கள் வேலி போட்டு தடுத்து உள்ளனர் . அதனால் இந்த நாராயணபுரம் மக்கள் சடலத்தை அவ்வழியில் தூக்கிச் செல்ல அங்குள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். 
 
இப்படியிருக்க, சில நாட்களுக்கு முன்னர் நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த குப்பன் என்பவர்  இறந்தார். அவரது சடலத்தை அவ்வழியே கொண்டு செல்ல எதிர்ப்பு நீடித்ததால், அந்த பாலத்தில் இருந்து கயிற்றால் சடலத்தை கட்டி இறக்கி, அதன் பின்னர் சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியருக்கும் முதல்வரின் தனிப்பிரிவிற்கும்  புகார் அளித்துள்ளதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் இவ்விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாராயணபுர கிராமத்தில் இருக்கும்  பட்டியலின மக்களுக்கு தனி மயானம் அமைத்துள்ளதாக தாசில்தார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
 
இதைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதிகள், தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்கு தனி மருத்துவமனைகள்,அரசு அலுவலகங்கள், காவல் நிலையம் என தனியாக இல்லாத நிலையில் க்தனி மயானத்தை அரசே அமைத்துக்கொடுப்பது சாதி பிரிவினையை ஊக்குவிப்பது போல் உள்ளதாக கூறினர். மேலும் தெருக்களில் இருக்கும் சாதிப்பெயர்கள் நீக்க வேண்டும் என உத்தரவிட்டும், அரசாணை நீக்கபட்ட நிலையில் பள்ளி பெயர்களில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி என்ற் பெயர்களை இதுவரை நீக்காதது ஏன் என கேள்வி எழுப்பினர். 
 
இதனைத்தோடர்ந்து மறைந்த குப்பன் உடலை பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறக்கியது தொடர்பாக எடுக்கபட்ட நடவடிக்கை குறித்து வரும் ஆகஸ்ட் 28 ஆம் நாள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியரர் மற்றும் தாசில்தாருக்கு உத்தரவிட்டுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்