ஓவர் நைட் மழையில வேலூர் படைத்த சாதனை!!

சனி, 17 ஆகஸ்ட் 2019 (15:08 IST)
100 வருடங்களுக்கு பிறகு ஆகஸ்ட் மாதத்தில் இந்த அளவு மழை பெய்துள்ளது வியப்பாக உள்ளதாம். 
 
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. 
 
நேற்று இரவு பெய்யத்தொடங்கிய மழை காலை வரை விடாமல் பெய்தது. இன்று மட்டும் தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நார்வே வானிலை மையமோ இன்னும் ஒரு வாரத்துக்கு விட்டு விட்டு மழை பெய்யும் என கூறியுள்ளது. மழைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள நிலையில், தமிழகத்திலேயே வேலூரில்தான் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. 
 
வேலூரில் 17 செமீ மழையும், கடலூரில் 13 செமீ மழையும், அரியலூரில் 12 செமீ மழையும், திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 11 செமீ மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
வேலூரில் 17 செமீ மழை என்பது மிகவும் அதிகமாகும். 100 ஆண்டுகள் கடந்து தற்போது ஆகஸ்ட் மாதத்தில் இந்த அளவுக்கு மழை பெய்துள்ளது என்பது கூடுதல் தகவல். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்