ஆ ராசாவுக்கு கமல் ஆதரவளித்தாரா? மக்கள் நீதி மய்யம் விளக்கம்!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (08:16 IST)
எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசியதற்கு திமுக மக்களவை உறுப்பினர் ஆ ராசா மன்னிப்புக் கேட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பிரச்சாரம் ஒன்றில் திமுக எம்.பி ஆ.ராசா முதல்வர் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக திமுகவினரே ஆ.ராசா செயலுக்கு அதிருப்தி தெரிவித்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுகவினரும் அதன் கூட்டணிக் கட்சியினரும் ஆ ராசாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கண்டனங்களைப் பதிவு செய்ததை அடுத்து ‘முதல்வரின் மணம் புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் கமல் ஆ ராசாவுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் அதை மறுத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன். அவரது டிவிட்டர் பக்கத்தில் ‘மக்கள் நீதி மய்யம் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், சில சமூக விரோதிகளால் ஊடகங்களில் பரவும் இந்தச் சுற்றறிக்கை தவறானது. அருவருக்கத்தக்க இச்செயலை செய்தவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்