சென்னையில் வீட்டு வேலை செய்த 16 வயது சிறுமி அடித்து கொலை? தொழில் அதிபர் மனைவி காரணமா?

Siva
சனி, 2 நவம்பர் 2024 (14:40 IST)
சென்னையில் வீட்டு வேலை செய்த 16 வயது சிறுமி கொலை செய்யப்பட்டதாக நடந்த சம்பவத்தில் தொழில் அதிபர் மனைவி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள முகமது நவாஸ் மற்றும் அவரது மனைவியான நிவேதிதா ஆகியோர் வீட்டில் கடந்த சில மாதங்களாக 16 வயது சிறுமி ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன் தினம், தீபாவளி அன்று, நவாஸ் வீட்டில் வேலை செய்து வந்த சிறுமி பாத்ரூமுக்க்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு நீண்ட நேரம் சென்ற பிறகு, அவர் வெளியே வராததால், அவரது மனைவி நிவேதிதா சென்று பார்த்தபோது, மயங்கிய நிலையில் தரையில் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து, உடனடியாக யாருக்கும் தெரியாமல், நவாஸ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டை விட்டுக்கொடுத்து உறவினர் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

நேற்று மாலை, வீட்டு உரிமையாளர் சிறுமி இறந்தது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், நவாஸ் மற்றும் அவரது மனைவி நிவேதிதா முன்னிலையில் பாத்ரூமில் இறந்து கிடந்த சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

சிறுமியின் உடலில் சில காயங்கள் இருப்பது உறுதியாகி, கணவன்-மனைவி இருவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும், இருவரும் கைதாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 18 வயதுக்கு உட்பட்டவர்களை வேலைக்கு வைக்க கூடாது என்ற சட்ட விதிகள் இருந்தும், 16 வயது சிறுமியை வேலைக்கு அமைதியாக எப்படி வைத்தனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்