பட்டாசு வெடிப்பதில் தகராறு: சென்னையில் 17 வயது சிறுவன் படுகொலை..!

Mahendran

சனி, 2 நவம்பர் 2024 (09:40 IST)
சென்னையில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சாம் என்ற 17 வயது சிறுவன், தீபாவளி தினத்தில்  நண்பர்களுடன் பட்டாசு வெடிப்பதற்காக ஐஸ் அவுஸ் செல்லம்மாள் தோட்டத்திற்கு சென்றார். அப்போது, அவர் திடீரென மயங்கி விழுந்துவிட்டதால், அவரது நண்பர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், சாமின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

அப்போது, பட்டாசு வெடிப்பதில் சாம் மற்றும் கார்த்திக் ஆகிய இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அந்த மோதலில் சாம், கார்த்திக் என்பவரால் தாக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் தான் அவர் மயங்கி உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது. இ

இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள கார்த்திக்கை தேடி வருகின்றனர். ஏற்கனவே அவர் மீது சில குற்ற வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சாம் உறவினர்கள் கார்த்திக்கை கைது செய்ய கோரி மயிலாப்பூர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்