படகுகள் சென்ற பாதையில் பஸ்கள் இயக்கம்.. காவிரி நீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் மேட்டூர்

Mahendran
சனி, 4 மே 2024 (08:10 IST)
காவிரி நீர் இல்லாமல் மேட்டூர் அணை வறண்டு கிடக்கும் நிலையில் படகுகள் சென்ற பாதையில் பேருந்துகள் இயக்கப்படுவதாக சோகமான செய்தி வெளியாகியுள்ளது.
 
காவிரி நீர் வழிப்பாதை வறண்டதால் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருவதாகவும், கடல்போல காட்சியளித்த மேட்டூர், கட்டாந்தரையாக காட்சியளிக்கும் பரிதாபத்தை பார்த்து அந்த பகுதி மக்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
 
சேலம் மாவட்டம் பண்ணவாடியில் இருந்து தருமபுரி மாவட்டம் நாகமரை இடையே பரிசல் சேவை நடந்த பகுதியில் மேட்டூர் அணை வறண்டதால் இரு இடங்களுக்கும் இடையே பேருந்து சேவை செய்யப்படுகிறது.
 
மேட்டூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை பெய்யாதது மற்றும் காவிரிகள் இருந்து கர்நாடகா மாநிலம் தண்ணீர் திறந்து விடாதது ஆகியவைதான் மேட்டூர் அணை வறண்டு கிடக்க காரணம் என்று விவசாயிகள் வருத்தத்துடன் கூறி வருகின்றனர். 
 
இதே ரீதியில் இன்னும் சில மாதங்கள் சென்றால் மேட்டூர் அணையை சுற்றி உள்ள பகுதியில் உள்ள மக்களுக்கு குடிதண்ணீர் கிடைப்பது கூட கஷ்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்