ஹைதராபாத் நகரில் கடும் வெப்ப அலை வீசுவதால் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படுவது குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கோடை காலம் தொடங்கி விட்டதை அடுத்து கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
தென்னிந்தியாவின் பல நகரங்களில் 100 டிகிரி செல்சியஸ் தாண்டி வெப்பம் பதிவாகி வருவதாக தகவல் வெளியானதை அடுத்து மதிய நேரத்தில் குழந்தைகள் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை வீசி வருவதை அடைத்து பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பேருந்து சேவை குறைக்கப்படுவதாக ஹைதராபாத் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது
மக்கள் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மறு அறிவிப்பு வரும் வரை மதிய நேரத்தில் குறைவான பேருந்துகளை இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.