சுதந்திர தின நிகழ்ச்சிகள் ரத்து! – கவர்னர் மாளிகை அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (08:21 IST)
தமிழக கவர்னருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சுதந்திர தின நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கவர்னர் மாளிகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் சுதந்திர தினத்தின் போது கவர்னர் மாளிகையில் கொடியேற்றப்படுவதுடன் தேநீர் விருந்தும் அளிக்கப்படும். இந்நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்திற்கு கொரோனா இருப்பது உறுதியானதை தொடர்ந்து அவர் மாளிகையிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

இதனால் தற்போது ராஜ்பவனிலிருந்து வெளியாகியுள்ள அறிவிப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் நடத்தப்படும் வரவேற்பு நிகழ்ச்சியை கொரோனா பரவல் காரணமாக நடத்துவதில்லை என கவர்னர் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்