திமுகவில் முக்கியமான தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை நேற்று முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு மிக நெருக்கமானவரான ஜெகத்ரட்சகன் கல்வி நிறுவனங்கள் மூலமாக பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாத வருமான வரித்துறைக்கு வந்த பல்வேறு புகார்களை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை, மருத்துவக் கல்லூரி, விடுதிகள், தி.நகர் அலுவலகம், அடையாறு, நுங்கம்பாக்கம், மகாபலிபுரம் வீடுகள் உட்பட 40 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடந்தது.
இந்த அதிரடி சோதனையில் 200 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சுமார் 27 கோடி ரூபாயை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் பற்றி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல முக்கிய ஆவணங்கள் இந்த சோதனையில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஜெகத்ரட்சகன் சுமார் 200 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.