சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (07:41 IST)
தமிழகத்தில் இன்று முதல் சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் நேற்று மாலை முதல் சென்னையில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் இன்று அதிகாலையில் இருந்தும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் உள்ள தேனாம்பேட்டை, மயிலாப்பூர், அண்ணா சாலை, எழும்பூர், சேத்துப்பட்டு, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் வேறு சில பகுதிகளிலும் நல்ல மழை பெய்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது 
 
சென்னை குரோம்பேட்டையில் நேற்று மாலை பெய்த ஒரு மணி நேரம் மழையால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது என்பதும் இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்குவதற்கு மிகுந்த சிரமப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று அதிகாலை முதலே நல்ல மழை பெய்து வருவதாகவும் இதனால் தமிழகம் முழுவதும் மக்கள் மகிழ்ச்சியாகவும் குளிர்ச்சியாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கொரோனா வைரஸ் காலத்தில் மக்கள் பெரும் சிரமத்தில் உள்ள நிலையில் இந்த மழை மக்களை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி இன்னும் ஒரு சில நாட்களுக்கு சென்னை உள்பட பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்பது குறிப்பிடப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்