தமிழகத்திலா? பாஜகவா? வாய்ப்பே இல்லை: புதுச்சேரியில் கணிப்பு!!

Webdunia
ஞாயிறு, 21 மே 2017 (10:08 IST)
தமிழகத்தில் பாஜக தனது ஆட்சியால் ஒருபோதும் காலூன்ற முடியாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


 
 
முதல்வர் நாராயணசாமி கூறியதாவது, அரசியல் காழ்ப்புணர்சியால் மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சிதம்பரம் வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம். 
 
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அதை வரவேற்கிறேன். ஆனால், தமிழகத்தில் தனியாக வந்தாலும் கூட்டணியுடன் வந்தாலும் பாஜகவால் தலைதூக்க முடியாது. மேலும், ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதியின் வைர விழாவில் புதுச்சேரி முதல்வர் என்ற முறையில் பங்கேற்பன் என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்