மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து டோக்கன் குறித்த முக்கிய அறிவிப்பை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து டோக்கன் வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த சேவையை பெற விரும்பும் மூத்த குடிமக்கள் தங்களுடைய இருப்பிட சான்று, குடும்ப அட்டை, வயது சான்று மற்றும் இரண்டு புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்ய, டிசம்பர் 21ஆம் தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்படும்.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை பேருந்துகளில் மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்ய, இந்த டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. ஒரு மாதத்திற்கு பத்து டோக்கன்கள் என்ற வீதத்தில், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா டோக்கன்கள் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.