செண்ட்ரல், எக்மோரை தொடர்ந்து.. பெரம்பூரில் பிரம்மாண்ட ரயில் முனையம்! - தெற்கு ரயில்வே அனுமதி!

Prasanth Karthick

செவ்வாய், 17 டிசம்பர் 2024 (10:26 IST)

சென்னை மாநகரில் ரயில் சேவைகளை ஒருங்கிணைக்கும் விதமாக அடுத்து பெரம்பூரில் பெரிய அளவிலான ரயில் முனையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

தமிழக தலைநகரான சென்னை பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருபவர்களுக்கு ஒரு முனையமாக செயல்பட்டு வருகிறது. வேறு நாடுகளில் இருந்து இந்தியா வரும் அண்டை மாநிலத்தவர் கூட சென்னை விமான நிலையம் வந்து அங்கிருந்து தங்கள் மாநிலங்களுக்கு ரயில் மூலமாக செல்வதுண்டு. இதனால் சென்னையில் ரயில் போக்குவரத்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் என அனைத்து சேவைகளுக்கும் இன்றியமையாததாக உள்ளது.

 

இதனால் சென்னையில் மாநிலத்திற்குள்ளான ரயில்களை பெருமளவு இயக்கும் எழும்பூர் ரயில் முனையம், வெளிமாநில ரயில்களை நிர்வகிக்கும் செண்ட்ரல் ரயில் முனையம் என இரு பெரும் ரயில் முனையங்கள் உள்ளன. இதுதவிர தாம்பரத்திலும் ரயில் முனையம் பல ரயில்களை கையாள்கிறது.
 

ALSO READ: பரிட்சைக்கு ஒழுங்கா படிங்க.. சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை: தமிழ்நாடு வெதர்மேன்
 

அதை தொடர்ந்து சென்னையில் அடுத்த நான்காவது பெரிய ரயில் முனையம் பெரம்பூரில் அமைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதிகரிக்கும் வெளிமாநில ரயில் பயணிகள் எண்ணிக்கையும், மாநகர போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு பெரம்பூரில் இந்த ரயில் முனையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பெரம்பூர் லோகோ வொர்க்ஸ் அருகே உள்ள இடத்தில் ரூ.428 கோடி செலவில் ரயில் முனையம் அமைக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. இங்கிருந்து பெரும்பாலான வடக்கு நோக்கி செல்லும் பெரும்பாலான ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்