ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியுடன் தினகரனை இணைப்பேன்: தனியரசு

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (20:09 IST)
ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக ஒருபக்கமும், தினகரன் தலைமையிலான அம்முக ஒரு பக்கமும் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் நிலையில் இரு அணிகளையும் வாய்ப்பு கிடைத்தால் இணைப்பேன் என  கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த தனியரசு, 'அரசியலில் எதுவும் நடக்காது என்று சொல்ல முடியாது. ஓபிஎஸ் அதிமுகவில் மீண்டும் இணைவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. தற்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்து அதிகாரத்தை பகிர்ந்து கொண்டனர். அதேபோல் அதிமுகவில் தினகரன் இணைய மாட்டார் என்று கூறமுடியாது. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இரு அணிகளையும் இணைக்க முயற்சி செய்வேன் என்று தனியரசு கூறியுள்ளார்.

அதிமுகவை கைப்பற்றும் வரும் வரை மட்டுமே அமமுக என்று உறுதியுடன் கூறி வரும் தினகரன், ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருக்கும் அதிமுகவில் தினகரன் இணைவது சந்தேகமே என்றும், இருவரும் இல்லாத அதிமுகவை அவர் விரைவில் உருவாக்குவார் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்