ஸ்டாலின், தினகரன் சந்திப்பு பலமுறை நடந்துள்ளது: ஓபிஎஸ்

திங்கள், 5 நவம்பர் 2018 (16:52 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் சமீபத்தில் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ரகசியமாக சந்தித்ததாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில்  ஸ்டாலினும், தினகரனும்  பலமுறை ரகசியமாக  சந்தித்துள்ளதாக தனக்கு தகவல்கள் வந்துள்ளதாக துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதனால் தமிழக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஏற்கனவே டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் ரகசியமாக சந்தித்ததாக சமீபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது ஓபிஎஸ் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தினகரன், மு.க.ஸ்டாலின் ரகசிய உறவு இருக்கின்றதா? என்பது வரும் 20 தொகுதிகள் இடைத்தேர்தலின்போது தெரிந்துவிடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்