நெடுங்குன்றம் சூர்யா பாஜகவில் இணைந்ததே எனக்கு தெரியாது! – பாஜக தலைவர் அண்ணாமலை!

Webdunia
ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (13:00 IST)
பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா பாஜகவில் இணைந்தது தனக்கு தெரியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



தமிழக பாஜக தலைவராக இருந்து வரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக சமீபமாக ‘என் மண் என் மக்கள்’ என்ற பாத யாத்திரையை நடத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் 200க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சூர்யா பாஜகவில் இணைந்தார்.

அவருக்கு பாஜக மாநில செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தலைவராக உள்ள ஒரு கட்சியில் குற்றவாளியும் சேர்ந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள அண்ணாமலை “அவர் கட்சியில் இணைந்தது எனக்கு தெரியாது. சிலர் தவறான மனிதர்களாக இருந்தாலும் தங்களை திருத்திக் கொள்ள முயல்கின்றனர். அவர்களுக்கு பாஜக கொடுக்கும் ஒரு வாய்ப்பாக இதை பார்க்கிறேன். நல்ல ஒரு பாரதத்தை உருவாக்க அவர் பாஜகவை பயன்படுத்திக் கொள்ளட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்