ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதற்காக கால அவகாசம் நீட்டிப்பு
சனி, 30 செப்டம்பர் 2023 (17:47 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது என்பதும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த அவகாசம் இன்றுடன் முடிவடைவதாகவும், எனவே 2000 ரூபாய் நோட்டுகள் கையில் யாராவது வைத்திருந்தால் உடனடியாக இன்று மாலைக்குள் வங்கி சென்று 2000 ரூபாய் நோட்டை கொடுத்து மாற்றிவிடுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், 2000 ரூபாய் நோட்டை வங்கியில் கொடுத்து மாற்றுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசத்தை வரும் அக்டோபர் 7 ஆம் தேதி வரை நீட்டித்து, இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்தாவது: வரும் அக்டோபர் 8 ஆம் தேதிக்கு மேல் ரிசர்வ் வங்கி வெளியிடும் 19 அலுவலகங்களில் மட்டும் ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் வரை ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.