சமூகநல்லிணக்க மனிதசங்கிலிக்கும் தடை விதித்திருப்பது எவ்வகையில் நீதியாகும்? திருமாவளவன் அறிக்கை

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (21:27 IST)
சமூகநல்லிணக்க மனிதசங்கிலிக்கும் தடை விதித்திருப்பது எவ்வகையில் நீதியாகும்?  என்று விசிக தலைவர் திருமாவளவன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்தநாள் அன்று தமிழ்நாடு முழுவதும் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தது. ஆனால் பொது அமைதிக்கு இடையூறு விளையும் என இந்த பேரணிக்கு அனுமதி வழங்கக்கூடாது என வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு  தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. .

அதேபோல்  திருமாவளனின் விசிக, திக, தபெதிக, திவிக, தபுக, மக்கள்மன்றம் உள்ளிட்ட சமூகநீதி இயக்கங்களும் பங்கேற்கிற சமூகநல்லிணக்க மனிதசங்கிலிக்கும் தடை விதித்திருப்பது குறித்து, திருமா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், மத ரீதியாக பாரபட்சம் பார்த்து பயங்கரவாதத்தை அணுகினால் அது இந்த நாட்டின் பாதுகாப்புக் கேடாகவே முடியும். பயங்கரவாதத்தைக் கட்டுபடுத்த வேண்டும் என்று  இந்திய அரசு உண்மையிலே விரும்பினால், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சனாதன பயங்கரவாத இயங்கங்களை உடனே தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அவர், தன் டுவிட்டர் பக்கத்தில்,  RSS ஒரு மதவெறி ஃபாசிச அமைப்பு; அரசியல் கட்சியல்ல. அது நடத்துவதாக அறிவிக்கப்பட்ட அணிவகுப்பைத் தடைசெய்த அதே வேளையில் இடதுசாரிகள் மற்றும் விசிக ஆகிய அரசியல் கட்சிகள் அறிவித்த மனித சங்கிலிக்கும் தடை விதித்தது எவ்வகையில் பொருந்தும்? மனித சங்கிலிப் போராட்டத்திற்கு மதிமுக, தவாக,. நாதக, மமக, இ.யூ.மு.லீக், தேசியலீக், எஸ்டிபிஐ, சிபிஐ (எம்எல்-விடுதலை) போன்ற அரசியல்கட்சிகளும் திக, தபெதிக, திவிக, தபுக, மக்கள்மன்றம் உள்ளிட்ட சமூகநீதி இயக்கங்களும் பங்கேற்கிற சமூகநல்லிணக்க மனிதசங்கிலிக்கும் தடை விதித்திருப்பது எவ்வகையில் நீதியாகும்?  பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் பாரபட்சம் காட்டக்கூடாது! 
சனாதனப் பயங்கரவாத அமைப்புகளையும் தடைசெய்யவேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்